கொழும்பிலும் யாழிலும் ஆர்ப்பாட்டங்கள்!



நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் மூவர் கொண்ட அணியொன்று இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

அதனையடுத்து பெருமளவு காவல்துறையினர்; மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடிருக்கும் பகுதிக்கு விரைவதாக தகவல் கிடைத்த நிலையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். 

சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம்.  போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாhளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்திருந்தார்.

இதனிடையே யாழ்.நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பதாக ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா இன்றைய தினம் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்;.

 இனக்கலவரத்திற்கு ஏதுவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வீட்டை முற்றுகையிட முனையும் அனைரையும் உடனடியாக கைது செய்து நீதியின் முன் நிறுத்து,உள்ளிட்ட கோசங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிபடுத்தி தம்பிராசா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


No comments