பிரிகோஜின் மரணத்தை டிஎன்ஏ மூலம் உறுதிப்படுத்தியது ரஷ்யா


ரஷ்யாவின் ட்வெர் பகுதியில் இந்தமாதம் ஆகஸ் 23 அன்று நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் யெவ்ஜெனி பிரிகோஜினும் ஒருவர் என்பதை ரஷ்யப் புலனாய்வாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினர்.

பிரிகோஜின் வாக்னர் தனியார் இராணுவக் குழுவின் தலைவராக இருந்தார். வாக்னர் குழுவை நிறுவிய டிமிட்ரி உட்கின் என்பவரும் விமானத்தில் இருந்தார்.

மரபணு சோதனையின் முடிவுகள் விபத்தில் இறந்த பத்து பேரின் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.


ட்வெர் பகுதியில் விமான விபத்து தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக மூலக்கூறு மரபணு பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன என்று விசாரணைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஸ்வெட்லானா பெட்ரென்கோ கூறினார்.

கொல்லப்பட்ட 10 பேரின் அடையாளங்கள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் வழங்கப்பட்ட விமானப் பறப்புப் பட்டியலுடன் ஒத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த சம்பவத்தை துரதிர்ஷ்டவசமானது என்று அழைத்தார், மேலும் இது மாஸ்கோவால் திட்டமிடப்பட்டது என்ற ஊகங்கள் முழுமையான பொய் என்று கூறினார்.

No comments