ரூமேனியா எரிபொருள் நிலையத்தில் வெடிப்பு: ஒருவர் பலி! 57 பேர் காயம்!!


ரூமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டுக்கு வடக்கே கிரெவேடியா கம்யூனில் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) நிலையத்தில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 39 தீயணைப்பு வீரர்கள் உட்பட 57 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தீயை அணைக்க உதவிய தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது வெடிப்பில் காயமடைந்தனர். 

தீயை கட்டுக்குள் கொண்டு வர சுமார் 25 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக ருமேனியாவின் அவசரகால சூழ்நிலை ஆய்வாளர் கூறினார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படலாம் என்று பிரதமர் மார்செல் சியோலாகு தெரிவித்தார்.

நோயாளிகளில் நான்கு பேர் இன்றிரவு இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றார் பிரதமர்.

800 மீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 3,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.No comments