ஆஸ்திரேலியாவில் இராணுவ ஒத்திகையில் விமானம் விழுந்தது: 3 அமெரிக்க கடற்படையினர் பலி!!




அமெரிக்காவின் இராணுவ விமானம் ஒன்று வடக்கு ஆஸ்திரேலிய தீவில் விழுந்து நொறுங்கியதில் மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு மெல்வின் தீவில் நடந்தது. பெல் போயிங் வி-22 ஆஸ்ப்ரே டில்ட்ரோட்டர் விமானமே விபத்தானது.

விபத்தில் இதுவரை மூவர் உயிரிழந்துடன் 23 பேர் காயடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 5 போின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் 80 கிமீ (50 மைல்) தொலைவில் உள்ள டார்வினின் பிரதான நகரத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 

அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கிழக்கு திமோர், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் இராணுவத்தினரை உள்ளடக்கிய வருடாந்த பிரிடேட்டர் ரன் பயிற்சியின் போது இந்த விபத்து இடம்பெற்றதாக அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஒரு துக்ககரமான சம்பவம் என்றார்.

பசிபிக் பகுதியில் ஒரு முக்கிய கூட்டாளியான அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும், அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தை அடுத்து சமீபத்திய ஆண்டுகளில் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன.

கடந்த மாதம் குயின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள கடலில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த விமானம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உட்பட மொத்தம் 13 நாடுகள் மற்றும் 30,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான Talisman Sabre இல் பங்கேற்றது.

No comments