மிலிந்த டெல்லியிலிருந்து புறப்பட்டார்!



இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, புதுடெல்லியில் இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பிரியாவிடை பெற்றுள்ளார்.

கோத்தபாயவின் சிபார்சில் டெல்லியை வெற்றிகரமாக கையாண்ட மிலிந்த தற்போது ரணிலின் அரசியல் நகர்வுகளிற்காக அழைக்கப்பட்டுள்ளார்.

மொரகொட, இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு அவர் புதுதில்லியில் இருந்த காலத்தில் அவர் அளித்த ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்துள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இந்திய-இலங்கை கூட்டு ஆவணத்தில் இணைப்பு பற்றிய குறிப்புகள், குறிப்பாக சாலை இணைப்பு பற்றிய குறிப்புகள் குறித்தும் அவர் அமைச்சரிடம் தெரிவித்தார். ஜூலை மாதம் இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமருக்கிடையிலான கூட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.


No comments