18ம் திகதி பொங்கலிற்கு அழைப்பு!குருந்தூர்மலையில் ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ்மக்கள் பொங்கல் பொங்கி வழிபடலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டள்ளது.

கடந்த 08ம் திகதியன்று குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபட தடை செய்ய இல்லை என்றும் எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விகாரைகள் மீது கை வைத்தால் அல்லது பௌத்த மதகுருக்கள் மீது கைவைக்க முயன்றால் நான்; தலைகளுடன் தான் வருவேன். வேலையை செய்வதற்கு எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை” என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments