இனஅழிப்பு சாட்சியங்கள் கலைப்பு?வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்தில் படையினரது 30வருட கட்டுப்பாட்டிலுள்ள  காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டு சம்பவங்களுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சருக்கெதிரான முறைப்பாடு நேற்று கொழும்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் செனரத் பெரேரா மற்றும் முன்னாள் தலைவர் காமினி ஏக்கநாயக்க ஆகியோரினால் தொடர்பான முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெற்றம் இரும்பு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 21 தென்னிலங்கையினை சேர்ந்தவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதானவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்தே அரச அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே படையினரின் வசமிருந்த கைவிடப்பட்ட சீமெந்து தொழிற்சாலை காணாமல் ஆக்கப்பட்டவர்களது சித்திரவதை கூடமாக இருந்திருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments