யேர்மனியில் 2ஆம் உலகப் போர் குண்டு கட்டுபிடிப்பு: 13,000 பேர் வெளியேற்றம்!!


யேர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் இரண்டாம் உலகப் போரின் காலத்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து  சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளை தற்காலிகமாக காலி செய்யுமாறு கூறப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் நேற்று திங்கள்கிழமை இரவு தெரிவித்தனர்.

இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போர் காலத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு. இதன் எடை 500 கிலோகிராம் (1100 பவுண்டுகள்) எனக் கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் ஒரே இரவில் வெடிகுண்டை வெடிக்கச் செய்வார்கள் என்று நகர அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 500 மீட்டர் (550-மீட்டர்) சுற்றளவில் உள்ள சாலைகளை காவல்துறையினர் மூடியுள்ளனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உள்ளூர் பள்ளிகளில் இரண்டு அறைகள் கிடைக்கப்பெற்றன.

வெடிக்காத குண்டுகள் யேர்மனியில் அசாதாரணமானது அல்ல. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் நீண்ட தூர தொடருந்துகள் தடைபட்டன. அதே நேரத்தில் பல உள்ளூர் பேருந்துகள் மற்றும் மின்வட்டி (டிராம்) பாதைகள் நிறுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் முடிந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகு, பல யேர்மனிய நகரங்களில் நிலம் வெடிக்காத குண்டுகளால் சிக்கியிருக்கிறது.

2020 ஆம் ஆண்டில், பிராங்பேர்ட்டில் 13,000 பேர் அதே அளவிலான பிரிட்டிஷ் வெடிகுண்டு தோண்டி எடுக்கப்பட்டதால் வெளியேற்றப்பட்டனர்.

டிசம்பர் 2021 இல், முன்சனில் ஒரு கட்டுமான தளத்தில் இரண்டாம் உலப் போர் கால வெடிகுண்டு வெடித்தது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments