மடகாஸ்காரில் ஏற்பட்ட சன நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு - 110 பேருக்கு காயம்


மடகாஸ்காரில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வடைந்துள்ளது.

மடகாஸ்காரில் இந்திய பெருங்கடல் தீவு போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் நேற்று பரியா என்ற தேசிய மைதானத்தில் இடம்பெற்றன.

குறித்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு 7 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடிய நிலையில் சன நெரிசல் ஏற்பட்டது.

இந்த சன நெரிசலில் சிக்குண்டு 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 110 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments