சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


இந்த மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ;ந்த மாதத்தில் மாத்திரம் 22,667 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவில் இருந்து 7,896 பயணிகளும் ஜேர்மனியில் இருந்து 6,966 பயணிகளும் பிரான்சிலிருந்து 5,584, பயணிகளும் ரஷ்யாவில் இருந்து 5,296, பயணிகளும் இத்தாலியில் இருந்து 4,666, பயணிகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து 4,092, பயணிகளும் கனடாவில் இருந்து 3,988 பயணிகளும் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 877,867 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments