யாழில். 15 சிறுவர்களுக்கு பிறப்பு பதிவு இல்லை
யாழ்ப்பாணத்தில் பிறப்பு பதிவற்ற 15 சிறுவர்கள் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நீதிமன்ற வழக்குகள் மற்றும் தந்தை தாய் இடையேயான முரண்பாடு, பெற்றோரின் அக்கறையின்மை உள்ளிட்ட காரணங்களால் பிறப்பு பதிவுகள் மேற்கொள்ளப் படவில்லை. 

இஅவ்வாறாக கடந்த காலாண்டில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 104 ஆக காணப்பட்ட போதும் பல்வேறு பட்ட தொடர்  முயற்சிகளுக்கு பின்னர் 89 பேருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இன்னமும் 15 பேருக்கே பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

No comments