யாழில். ஆசிரியரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தரம் 07இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவன் காது வலியினால் துடித்த காதினால் நீரும் வடிந்துள்ளது. அதனை அடுத்து பெற்றோர் மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த போது , வைத்திய பரிசோதனையில் மாணவனின் செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு , மாணவனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் வைத்தியசாலை ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment