பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் சேட்டை புரிந்த பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இடமாற்றம்


கடமையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருடன் மது போதையில் சேட்டை புரிந்த பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 26ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தன்னுடன் , பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக அன்றைய தினம் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி தவறாக நடக்க முற்பட்டார்  என பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறித்த பொலிஸ் அதிகாரியை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

No comments