விபத்தில் சிக்கி யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு


விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். 

அனுராதபுரம் பகுதியை சேர்ந்த , செனவிரட்ன (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, கனரக வாகனம் ஒன்றுடன் விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments