யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.


படகு பழுதடைந்தமையால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் தமிழகம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கி உள்ளனர். 

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை அற்புதராஜா ஸ்ரீகாந்தன் (வயது 37) , வல்வெட்டித்துறையை சேர்ந்த சு. சிவகுமார் மற்றும் குருநகரை சேர்ந்த றொபின்சன் றீகன் (வயது 24) ஆகிய மூவருமே கரையொதுங்கியுள்ளனர். 

எழுவை தீவில் இருந்து கடந்த 06ஆம் திகதி கடற்தொழிலுக்காக படகொன்றில் சென்ற வேளை படகு பழுதடைந்த நிலையில் , வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கியதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர் 

அவர்களை தமிழக கடலோர காவல் படையினர் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments