சந்நிதி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்த அடியவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில், இன்றைய தினம் திங்கட்கிழமை அங்கப் பிரதிஷ்டை செய்த அடியவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில், உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் (வயது 57) என்பவரே உயிரிழந்தார்.

சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் உடற்கூற்று பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments