காட்டுத் தீயை எதிர்த்துப் போராடிய உலங்கு வானூர்தியின் வானோடி உயிரிழந்தார்


கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியின் 41 வயதுடைய வானோடி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீஸ் ரிவர் பகுதியில் மானிங் நகரின் தென்கிழக்கே இந்த விபத்து நடந்தது. கனடா தழுவிய ரீதியில் 900 இடங்களில் தீ பற்றி எரிகிறது. அதில் 553 தீ எரிவைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கருதப்படுகிறது.

தீயை அணைப்பதற்கு உலங்கு வானூர்திகளில் வாளிகள் மூலம் நீரை ஊற்றி தீணை அணைக்கு முயற்சிக்கின்றனர்.

குறித்த உலங்கு வானூர்தி கடந்த 19 ஆம் நாள் முதல் காணவில்லை என அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த உலங்கு வானூர்தி ஆல்பர்டா மாநிலத்தின் ஹேக் (Haig) ஏரிக்கு அருகே அது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே காட்டுத் தீயை அணைக்க முற்பட்டபோது இரு தீணையப்பு வீரர்கள் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தனர்.

வானோடி நாட்டிற்கு ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ கூறினார்.

No comments