பனைகூட சொந்தமில்லை



வடக்கு- கிழக்கில் பனை வள அபிவிருத்தி தொடர்பில் படித்த தகுதி வாய்ந்த இளைஞர்கள், யுவதிகள் ஆயிரக்கணக்கில் இருக்கையில்,  ; துறையுடன் தொடர்பில்லாத 25 இற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர், யுவதிகளை பனை அபிவித்திச் சபை உள்வாங்கியிருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பெருமளவில் கொழும்பை மையமாகக் கொண்டு பணியாற்றி வருவது பனை அபிவிருத்தி சபை கீழ்நோக்கிச் செல்வதற்குக் காரணமாக அமைகின்றது எனவும் சுரேஸ் பிறேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பனை வளமானது முழுமையாக வடக்கு - கிழக்கையே சார்ந்துள்ளது. 

ஏறத்தாழ 11 இலட்சம் பனை வளம் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது.

ஆனால் இதைக் கொண்டு நடத்தும் பனை அபிவிருத்திச் சபையானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

அமைச்சர்களின் அற்பத்தனமான முன்யோசனையற்ற பதவி வழங்கல்களானது பனைவள அபிவிருத்தியை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் அழைப்புவிடுத்துள்ளார்.


No comments