தாயகமெங்கும் கரும்புலிகளிற்கு அஞ்சலி!வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் தேசத்திற்காக தம்மை ஆகுதியாக்கிக்கொண்ட கரும்புலிகள் நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்  நினைவேந்தல் இன்றைய தினம் புதன்கிழமை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தின் கரும்புலிகளின் நினைவுருவ படத்திற்கு மாணவர்களால்  ஈகைசுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதேவேளை முதல்கரும்புலி மில்லர் தன்னை ஆகுதியாக்கிக்கொண்ட நெல்லியடியில் இன்றிரவு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு தேவிபுரத்தில் நினைவேந்தப்பட்டது கரும்புலிகள்நாள்

முல்லைத்தீவில் தேவிபுரம் பகுதியில்; கரும்புலிகள் நாள் சிறப்புற நடைபெற்றுள்ளது.

த}யக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாளினை நினைவிற்கொள்வதற்கு அரசு தடைவித்துள்ள நிலையில் கரும்புலிகளை மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.

இதனிடையே கிளிநொச்சி – அக்கராயன் சந்தியில் அமைந்துள்ள அக்கிராசன் மன்னனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள்; கலந்துகொண்டிருந்தனர்.

கரும்புலிகள் தினத்தை நினைவுகூர்ந்து அக்கராயன் சிலை நிறுவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது கரும்புலிகள் நாள்


No comments