சீனாவில் கடும் மழை: வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழப்பு

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் பெய்த கனமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான சின்ஹுவா புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

சோங்கிங் நகராட்சியில் கடந்த திங்கள்கிழமை முதல் பெய்த கன மழையால் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

சோங்கிங் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 85,000க்கு மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதேநேரம் ஆயிரக்கணக்காணோர் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வெள்ளம், கடுமையான வெப்பம் மற்றும் சூறாவளி உள்ளிட்ட பல இயற்கை பேரழிவுகளை ஜூலை மாதத்தில் சீனா எதிர்கொள்ளும் என்று சீன அதிகாரிகள் எச்சரித்திருந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.

No comments