நெதர்லாந்தில் வகுப்பறைகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை!!
கவனச் சிதறல்களைக் குறைக்க பள்ளி வகுப்பறைகளில் செல்பேசிகள் (திறன்பேசிகள்) மடிக்கணனிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்ககளைப் பயன்படுத்துதை நெதர்லாந்து அரசாங்கம் தடை செய்கிறது.
ஜனவரி 1, 2024 முதல் இந்தத் தடை அமல்படுத்தப்படும் என்று நெதர்லாந்தின் கல்வி அமைச்சகம் கூறியது.
ஜிட்டல் திறன்கள் குறித்த பாடங்களுக்கு விதிவிலக்குகள் செய்யப்படும் அல்லது குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு அல்லது பிற மருத்துவ நிலைமைகள் இருந்தால் இந்த சாதனங்கள் தேவைப்படும் போது பயன்பாட்டு விதிவிலக்களிக்கப்படும்.
நெதர்லாந்து கல்வி அமைச்சர் ராபர்ட் டிஜ்க்ராஃப் அறிக்கையில் தெரிவிக்கையில்:-
மொபைல் போன்கள் நம் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தாலும் அவை வகுப்பறையில் இல்லை என்றார்.
மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நன்றாக படிக்க வாய்ப்பளிக்க வேண்டும். மொபைல் போன்கள் ஒரு இடையூறாக அமைவதாக அறிவியல் ஆராய்ச்சி காட்டுகிறது. இதில் இருந்து மாணவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். பள்ளிகள் தங்கள் சொந்த திட்டங்களின்படி தடையை செயல்படுத்த இடம் வழங்கப்படும். ஆனால் 2024 கோடையில் தடையை அமல்படுத்தாவிட்டால் சட்ட விதிகள் பள்ளிகள் மீது பாயும் என அவர் எச்சரித்தார்.
Post a Comment