இளம் பெண்களை கத்தியால் குத்திய நபருக்கு ஆயுள் தண்டனை!!


கடந்த டிசம்பர் மாதம் தெற்கு யேர்மனியில் இரு இளம் பெண்களைக் கத்தியால் குத்தியதற்காக எரித்தியா புகழிடக் கோரிக்கையாளர் ஒருவருக்க ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Okba B என மட்டுமே அடையாளம் காணப்பட்ட 27 வயது நபர், டிசம்பரில் Illerkirchberg நகரில் சிறுமிகளை மீது கத்தித்குத்துத் தாக்குதல்களை நடத்தியிருந்தார்.

14 வயது சிறுமி 23 கத்திக்குத்துக் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இறந்தார் மற்றும் 13 வயதுடைய அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

எத்தியோப்பியாவில் திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான கடவுச்சீட்டை அதிகாரிகள் வழங்காததால் அவர் கோபமடைந்து இச்செயலைச் செய்ததாக தாக்குதலாளி நீதிமன்றில் தொிவித்தார். 

ஒக்பா பி (Okba B) செய்தது கடுமையான குற்றம். எனவே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர் 15 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.சிறைவாசத்திற்குப் பிறகு அவர் முன்கூட்டியே விடுதலை பெறுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

ஒக்பா பி நீதிமன்றத்தில் தனது செயலுக்கு வருந்துவதாகவும், குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருவதாகவும் கூறினார்.

தீர்ப்பை அவர் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் அது நிற்கும் பட்சத்தில், அவரது சிறைத் தண்டனையின் போது அவர் நாடு கடத்தப்படலாம் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

No comments