கைகள் கட்டப்பட்டு கொலையானார்களா?முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் பற்றிய ஆய்வில் கைகள் வயர்களால் கட்டப்பட்ட நிலையில் கொலைகள் அரங்கேறியதாவென்ற சந்தேம் எழுந்துள்ளது.

தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றுள்ள நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய மனித எச்சங்களை அகழும் பணிகள் இடம்பெறவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இனங்காணப்படும் மனித புதைகுழிகளின் உண்மைத் தன்மையை மறைக்க அரசு முற்படுவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

முன்னதாக முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில்  ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட  எலும்புக்கூடுகளுக்கு அருகில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ன

அத்துடன் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன .

முதல் நாள் அகழ்வில் 13 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஆண், பெண் இருபாலரதும் எலும்புக்கூட்டு தொகுதிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலதிக அகழ்வு பணி இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய அகழ்வு பணிகள் மாலைவேளையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது


No comments