13ஆவதையாவது தர சொல்லுங்கள்!



முதலில் சட்டத்தில் உள்ள 13ஐ அமுல் செய்து காட்ட இலங்கை அரசை சர்வதேசம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் என தமிழ் கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.கனேடிய ராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போதே   நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன்,செல்வம் அமைக்கலநாதன் மற்றும் த.சித்தார்த்தன் ஆகியோhர் ஒருமித்த குரலில் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர்.



இலங்கை இந்திய ஒப்பந்த பிரகாரமான 13ம் திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்கு தெளிவாக தெரியும். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். அஆனால் குறைவாகவே செயல்களை செய்கிறார்.

அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13ம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். அதற்கு கனடா அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் மூவரும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.ஷ

இலங்கை அரசு தொடர்பில் காட்டமான கருத்துக்களை வெளியிட்டுவரும் கனேய நாட்டு ராஜதந்திரிகள் தொடர்ச்சியாக தமிழ் தரப்புக்களது நிலைப்பாட்டை அறிந்து கொள்ள சந்திப்புக்களை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments