கதிரை முக்கியம் கோபாலு!யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள தற்போதைய துணைவேந்தர் முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.தொடர்ச்சியாக தன்னை புனிதராக காண்பிக்க முற்படுவதாக தற்போதைய துணைவேந்தர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.தனது வெற்றியை உறுதிப்படுத்த வலு அற்ற பினாமிகளை போட்டியில் இறக்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதனிடையே  துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்கு தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, “நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து அழைக்கிறோம்.

யார் துணைவேந்தராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? ஏன விசாரிக்கப்படுவதாக பேரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தெரிவுக்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில் திட்டமிட்டு ஒருவரை வெல்ல வைக்கவே இத்தகைய முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.     


No comments