நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் , 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், தமிழக கடற்தொழிலாளர்களின் 2 படகையும் அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 09 கடற்தொழிலாளர்களையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

No comments