சுவிசில் வீசிய புயல்!


சுவிட்சர்லாந்தின் நியூசெட்டல் மாகாணத்தில் உள்ள லா சோ து பொன்ட்ஸ் ( La Chaux-de-Fonds) மிகவும் கடுமையான இடியுடன் கூடிய மழையால் பாதிக்கப்பட்டது. 217 km/h (135 mph) வேகத்தில் காற்று வீசியதாக உறுதி செய்யப்படாத செய்திகள் கூறுகின்றன. இதன் காரமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.

நேற்று திங்கட்கிழமை வீசிய பலத்த காற்றினால் கட்டிடம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பழுதூக்கி (கிரேன்) சரிந்து வீழ்ந்தது. வீட்டின் கூரைகளில் இடிபாடுகள் ஏற்பட்டன.

பழுதூக்கி சரிந்து விழுந்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 15 பேர் காயடைந்மடைந்துள்ளனர் என காவல்துறையினரின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் அவசர சேவைப் பிரிசில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களின்  உயிருக்கு எந்த ஆபத்தானது இல்லை என அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments