குளியலறையில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது


குளியலறையில் பெண் ஒருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் அம்பாறை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணிக்குள் இரகசியமாக பிரவேசித்து, அக் காணியில் உள்ள வீட்டின் குளியலறையில் இருந்த பெண்ணை கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments