வவுனியாவில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் உள்ள விதை உற்பத்தி பண்ணைக்கு அருகில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் , வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த சிவகுமார் ரூபீன்ராஜ் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கனரக வாகனம் ஒன்றினை மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞன் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த ஹயஸ் ரக வானுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார்.
Post a Comment