வாக்னர் குழு இராணுவத்தில் சேரலாம் அல்லது பெலராஸ் செல்லலாம் - புதின்


வாக்னர் குழுவைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்குச் சென்று விடலாம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

வாக்னர் கூலிப்படையின் போராளிகள் மற்றும் இரத்தம் சிந்துவதைத் தவிர்க்க உறுதுணையாக இருந்த தளபதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வாக்னர் குழுவினர் விரும்பினால் வேறு இடங்களுக்குச் செல்லவோ, பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவோ, அல்லது தங்களின் குடும்பத்தினருடன் திரும்பவோ அனுமதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாக்னர் குழுவில் இருக்கும் பெரும்பாலானவர்கள் ரஷ்ய தேசபக்தர்கள் என்று குறிப்பிட்டுள்ள புதின், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆயுதக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டிருக்கும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

No comments