விஜயகலா உடல்நிலை முன்னேற்றம்!விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா மகேஸ்வரன், புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை மேம்பட்டுவருவதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது..

விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வாகனம் மரமொன்றின்மீது மோதியதால் விபத்து இடம்பெற்றதாக ஒரு தகவலும் மற்றெரரு வாகனத்துடன் மோதியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கப்படுகிறது.

ஜக்கிய தேசியக்கட்சியினில் தற்போதுவரை எஞ்சியுள்ள வடக்கு தலைவர்களுள் ஒருவராக விஜயகலா மகேஸ்வரன் உள்ளார்.

அவரது கணவரான முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் பின்னராக யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற  தேர்தலில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

எனினும் 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விஜயகலா மகேஸ்வரன் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments