சச்சிதானந்தத்திற்கு வந்த சந்தேகம்!

 


இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே தையிட்டி விகாரைக்கும் நடக்கும்:மைத்திரியை எச்சரித்தார் இலங்கை சிவசேனை தலைவர் சச்சிதானந்தம் தையிட்டியில் கட்டபட்டுள்ளது  விகாரையல்ல.அதை கட்டிய பிக்குவின் காவி ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமையென ஈழம் சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் கோரிக்கைவிடுத்;துள்ளார்.

மூன்று நாள் விஜயமாக இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல முக்கிய சந்திப்புக்களில் மைத்திரி கலந்துகொண்டுள்ளார்.

இந்தநிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கும், யாழ்ப்பாண மாவட்ட இந்துமத குருமார்கள் மற்றும் இந்துமத அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29) காலை இடம்பெற்றது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்து ஆலயங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் கேட்டறிந்து கொண்டதாக சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவிததுள்ளார்.


No comments