மொட்டு கருகுகின்றது:பாய்ச்சல்!நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 25க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக்குழுவினர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு ஏற்கனவே இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும், டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழு அங்கு தீவிரமாக செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த குழுவிற்கு மேலதிகமாக மேலும் பல குழுக்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

No comments