உக்ரைனில் ககோவ்கா அணை தகர்ப்பு: 80 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்


உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ககோவ்கா அணை ரஷ்யத் தரப்பினரால் தகர்க்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனை ரஷ்யா மறுத்துள்ளது.

இதனால் டினிப்ரோ நதி என்றும் அழைக்கப்படும் டினீப்பர் ஆற்றின் கீழ் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இங்கு ஏற்படும் இங்கிருந்த மின்லையம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.

இந்த இணை அழிப்புக்கு உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றசம் சாட்டியுள்ளனர்.

150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு குளிரூட்டும் நீர்த் தேக்கத்திற்கு இங்கிருந்தான் நீர் செல்கின்றது.

சோவியத் கால அணையானது 2014 இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தின் கீழ்நோக்கி நீரை வழங்குகிறது. மேலும் ஜபோரிஜியா மின் நிலையத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்கத்தை வழங்குகிறது.

இந்த அணை உடைப்பால் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனைச் சுற்றியுள்ள 80 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளன.

அணைத் தாக்குதலால் பெரிய எண்ணெய் கசிவு ஏற்படுகிறது

ககோவ்கா நீர்மின்சார அணையில் இருந்து அதிக அளவு எண்ணெய் டினீப்பர் ஆற்றில் கலக்கப்பட்டுள்ளது. அத்துடன் 150 தொன் எடை உள்ள மின்சார இயந்திரம் ஆற்றில் விழுந்துள்ளது.

ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், ககோவ்கா அணை மீதான தாக்குதல், வன்முறையை அதிகரித்து, குடிமக்களின் உள்கட்டமைப்பை குறிவைக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உத்திக்கு இணங்க உள்ளது என்றார்.

இந்த அணை உடைப்பிற்கு  உக்ரைன் படைகள் தான் காரணம் என மாஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனின் கெர்சன் பிராந்திய நிர்வாகம், நீர்மட்டம் இன்னும் ஐந்து மணி நேரத்தில் மிக மோசமான நிலையை எட்டும் என்று கூறியதுடன், ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றத் தொடங்கியது.

ரஷ்ய பயங்கரவாதிகள்"அணை மீது தாக்குதல் நடத்தியதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார்.

No comments