கைதுகளை தொடர்ந்து பயணத்தடை!

 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற    உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இலங்கையை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை காவல்துறை கிளிநொச்சி நீதிமன்றில் இன்று (06) சமர்பித்த விண்ணப்பத்துக்கு அமைய பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

முன்னதாக மருதங்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் உட்பட இருவர் நேற்;று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.இதனிடையே சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வடமராட்சி கிழக்கு தாளையடி பொதுளையாட்டரங்கில் கடந்த 03 ஆம் திகதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்தபோது அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவினர்.

அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்கப்பட்டபோது அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றுவிட்டார்.

இந்நிலையில், காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டை முன்வைத்து சற்குணதேவி ஜெகதீஸ்வரன் மற்றும் கட்சி உறுப்பினரான உதயசிவம், இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.


No comments