ஓயாத புதையல் வேட்டை?
முல்லைத்தீவு - முள்ளியவளை மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை, சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
இதனிடையே கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவப் பிரிவில் பணியாற்றும் அதிகாரியென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதிரடிப்படையினர், புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரையும் கைதுசெய்துள்ளதுடன், தோண்டுவதற்கு பயன்படுத்திய ஸ்கனர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.
முள்ளியவளை, கணுக்கேணி, பூதன்வயல், நொச்சியாகம, ராஜாங்கனை, சாலிய அசோகபுர, அம்பலாந்தோட்டை மற்றும் தபுத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்றுப் பொருட்களையும் சிறப்பு அதிரடிப் படையினர் முள்ளியவளை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இறுதி யுத்த காலத்தில் புதைத்துவைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் காலத்து உடமைகளை தேடி பல கும்பல்கள் வன்னியில் அலைந்து திரிந்தேவருகின்றன.
Post a Comment