காணி பிடிப்பிற்கு விடுமுறை!

 

வலிகாமம்  வடக்கு பிரதேசத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழ் மக்களது காணிகளை அரசுடமையாக்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விலக்கிக்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பான  கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் செயற்குழு பிரதானி சாகல ரத்நாயக்கா தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(06.06.2023) நடைபெற்ற ;கலந்துரையாடலின், முடிவில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய குழு ஒன்றினை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரையும் காவல்துறையினரையும் உள்ளடக்கிய குழு குறுகிய காலப் பகுதிக்குள், அதிகபட்சமாக விடுவிக்கக் கூடிய காணிகளை  அடையாளப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று, வலி வடக்கு பிரதேசத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அரசுடமையாக்குவது தொடர்பாக வர்த்தமாணி வெளியிடப்பட்ட சுமார் 6000 ஏக்கர் காணிகளில சுமார் 3000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதால் குறித்த வர்த்தமானியை மீளப் பெறுவதற்கான  அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்து மீள்குடியேற்றுவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments