மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்


மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கவுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடி அது தொடர்பில் தீர்மானிக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் கடந்த 27ம் தேதி மக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் தற்போது ஆணையத்தால் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments