சேர்பியாவில் 2வது துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி! 14 பேர் காயம்!


சேர்பியாவில் ஓழும் மகிழுந்திலிருந்து துப்பாக்கிதாரி தானியங்கித் துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

விரிவான தேடுதலுக்கு பின்னர் சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இச் சம்பவம் சேர்பியால் நடைபெற்ற இரண்டாது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாகும்.

பெல்கிரேடில் இருந்து 60 கிமீ (37 மைல்) தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

கடந்த புதன்கிழமை பெல்கிரேட் பள்ளியில் ஒரு சிறுவன் ஒன்பது பேரைக் கொன்றதை அடுத்து, இது சேர்பியாவின் மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாக அமைகிறது.

No comments