கிளிநொச்சி வீதிவிபத்தில் நால்வர் பலி!



கிளிநொச்சி முரசுமோட்டை - நான்காம் கட்டை பகுதியில் இன்று மாலை அரங்கேறிய வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மாலை 4.40 மணியளவில் விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.அதன் போது, காரில் பயணித்த நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பொன்னையா பூபாலன், மற்றும் ஒரே வகுப்பு தோழர்களான 34 வயதுடைய சந்திரகுமார் சவேந்திரன் புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குணதர்சன், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவானி பிரசாத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

நண்பர்கள் அனைவரும் கார் ஒன்றில் பயணித்த நிலையில் விபத்தில் சிக்கியுள்ளனர

No comments