தையிட்டி யார் சொல்வது உண்மை?

 


யாழ்ப்பாணம் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் மறுத்துள்ளதாக கூறப்படுவதை அரச அமைச்சர் சந்திரசேகரன் மறுதலித்துள்ளார்.

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொழும்பில் நேற்று கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது.

அதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை பகுதியளவேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

காணி முற்றுமுழுதாக விகாரைக்குச் சொந்தம் என்பதால், அதை விடுவிக்கும் எண்ணம் இல்லை என்றும், அவ்வாறு விடுவிப்பது பொருத்தமாக இருக்காது எனவும் அவர்கள் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.

திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியைத் தவிர, ஏனைய காணிகளை விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அண்மையில் தகவல்கள் வெளிவந்திருந்தன.

அவ்வாறான நிலையிலேயே, பகுதியளவேனும் காணிகளை விடுவிப்பதற்குத் தற்போது திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் சந்திப்பில் காணி விடுவிப்பு தொடர்பில் மறுக்கப்பட்டமையினை அரச அமைச்சர் சந்திரசேகரன் மறுதலித்துள்ளார்.


No comments