மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல்?
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதும் வன்னியில் போர்க்கால புதையல்களை தோண்டியெடுப்பது ஓய்ந்தபாடாகவில்லை.
கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்களான சிங்களவர்கள் விசேட அதிரடிப் படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்
கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு அதிரடிப்படை இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதி பகுதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
அதன் போது விடுதி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த அனுராதபுரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 04 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பன விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் போல வருகை தந்து விடுதியில் தங்கியிருந்து புதையல் தேடலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கத்திற்காக உரிமம் இல்லாமல் அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் அரசு சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர்கள் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.விசாரணைகளின் பின்னராக அவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Post a Comment