உக்ரைனுக்கு எவ்-16 விமானங்களை வழங்க அமெரிக்கா பச்சைக்கொடி!


உக்ரைனுக்குப் எவ்-16 எஸ் வகைப் போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கவும் பயிற்சிகளை வழங்கவும்  ஜனாதிபதி ஜோ பிடன் தனது கூட்டணிக்கு நாடுகளுக்கு பச்சைக்கொடி காட்டினார்.

உக்ரேனிய விமானப்படையின் திறன்களை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும், F-16  எஸ் உட்பட நான்காம் தலைமுறை போர் விமானங்களில் உக்ரேனிய விமானிகளுக்கு பயிற்சி அளிக்க எங்கள் நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் கூட்டு முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று பிடென் கூறினார். 

இந்த நடவடிக்கையை உக்ரைனிய ஜனாதிபதி வரலாற்று முடிவு என்று பாராட்டினார்.

உக்ரைன் F-16 களை வழங்க அமெரிக்கா மறுத்ததிருந்த நிலையில் திடீரென உக்ரைனுக்கு வழங்கு முன்வந்தமை ஒரு திருப்பு முனையாகும்.

ரஷ்ய மண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்கு கெய்வ் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று பிடென் நிர்வாகம் அஞ்சுகிறது.

இதன் மூலம் உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் களஞ்சியத்தை கொண்டுள்ள ஒரு நாட்டுடனான அதன் மோதலை ஆபத்தான முறையில் அதிகரிக்கிறது.

இது சர்வேதேச ஆயுத தளபாடப் போட்டிக்குச் சவாலாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உக்ரைனின் எல்லைகளுக்கு அப்பால் மோதலை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்யப்படவேண்டும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் உக்ரைன் F-16 களுக்கான தனது பரப்புரையை விடவில்லை. எந்தவொரு சூழலிரும் ரஷ்ய எல்லைக்குள் தாக்குதலை நடத்தமாட்டோம் என்று பரப்புரை செய்துவந்தது. இந்நிலையில் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்களுக்கு அவை தேவை என்று வாதிட்டது. குறிப்பாக ரஷ்ய தாக்குதல்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க அதன் வான்வெளியைக் கட்டுப்படுத்தும் போதுமானவை என்ற உக்ரைன் கூறிவருகிறது.

No comments