எவ்-16 போர் விமானங்களுக்கு அமெரிக்கா பச்சைக்கொடி! எச்சரிக்கிறது ரஷ்யா!


உக்ரைனுக்கு எவ்-16 போர் விமானங்களை வழங்குவது மிகப் பொிய அபாயங்களைக் எதிர்கொள்கிறது என ரஷ்யா எச்சரித்துள்ளது.

மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரேனுக்கு ஜெட் விமானங்களை வழங்க அமெரிக்கா அனுமதிக்கும் அறிவிப்பைத் தொடர்ந்து, ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ தெரிவிக்கையில்:

மேற்கத்திய நாடுகள் இன்னும் நேட்டோவின் விரிவாக்க சூழ்நிலையை கடைபிடிப்பதை நாங்கள் காண்கிறோம். இது தங்களுக்கு மிகப்பெரிய அபாயங்களை உள்ளடக்கியது என்று க்ருஷ்கோ தெரிவித்தார்.

எதுவாக இருந்தாலும் எவ்-16 போர் விமானங்கள் வழங்கும் திட்டம் எங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நாங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய தேவையான அனைத்து வழிகளும் எங்களிடம் உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று எவ்-16 போர் விமானங்களை வழங்குவது மற்றும் உக்ரேனிய விமானிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்த அறிவிப்பை ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அமெரிக்கா உறுதிப்படுத்தியது.

No comments