காணியே பிடிக்கவில்லையாம்!

 


யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள்  வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என்று வர்த்தமானி அறிவிப்பு  வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் காணிகளை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் போன்ற எந்தவிதமான அரச திணைக்களங்களுக்கும் கொடுப்பதற்கான தீர்மானங்கள் எவையும் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டிற்கு முன்னர் மக்களின் குடியிருப்புக்களாகவும் விவசாய நிலங்களாகவும் இருந்த அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

அண்மையில் வடகிழக்கை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து காணிகள் ஆக்கிரமிப்பு தொடர்பில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments