பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம்!



பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (30) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க செயலாளர் ஜெனிட்டா, “பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது எமது உரிமைகளை கேட்க முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

அதனாலேயே புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நாடாளுமன்றத்திலே நிறைவேற்றக் கூடாது என்பதை கேட்டுக்கொள்கின்றோம். 

“நாம் இன்று ஜனநாயக முறையிலும் அகிம்சை வழியிலும் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இந்நிலையில், இந்த அரசாங்கமானது, பயங்கரவாத தடைச்சட்டத்தை எடுப்பதாக கூறி, புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வர இருக்கிறது. 

அதனால் எமது ஜனநாயக போராட்டத்தில் கருத்து சுதந்திரம், போராடும் சுதந்திரம் எமக்குக் கிடைக்காது என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட அனைவரிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க பாடுபடவேண்டுமெனவும் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க செயலாளர் ஜெனிட்டா கோரிக்கைவிடுத்துள்ளார்.


No comments