நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு: 51 பொதுமக்கள் பலி!


நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

நேற்று வெள்ளிக்கிழமைபெனு மாநிலத்தின் உமோகிடி கிராமத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 51 பேர் இறந்தனர். மேலும் அப்பகுதியில் உடலங்கள் தேடப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் கால்நடை மேய்ப்பர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழமை.

கால்நடைகளை வளர்ப்பவர்கள் தங்கள் பயிர்களை அழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை தாக்குவதாக கால்நடை வளர்ப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆயுதம் ஏந்திய கும்பல் கிராம சந்தையில் தாக்குதலை தொடங்கியதாக கூறப்படுகிறது. பலர் ஒளிந்து கொள்வதற்காக புதருக்குள் ஓடினர். ஆனால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை கொல்லப்பட்ட மூவருக்கு மக்கள் துக்கம் அனுசரிக்கும் போது இத்தாக்குதல் நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையிலான மோதல்களால் இப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் இருப்பு பயங்கர மோதல்களை நிறுத்தவில்லை.

No comments