இஸ்ரேலில் சுற்றுலாப் பயணிகள் மீது மகிழுந்து தாக்குதல்: ஒருவர் பலி! ஐவர் காயம்!


இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் சுற்றுலாப் பயணிகள் மீது மகிழுந்து ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தப்பட்டது. 

காஃப்மன் கடற்கரை பூங்காவிற்கு அருகே நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த மகிழுந்து ஒன்று மோதிக் கவிழ்ந்தது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த இஸ்ரேல் காவல்துறையினர், கூட்டத்தினர் வேண்டுமென்றே மகிழுந்தை மோதி தாக்குதல் நடத்திய தாக்குதலாளியை மடக்கி பிடிக்க முயன்ற போது, துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்த முயன்றதால் சுட்டுக் கொன்றனர்.

இதேநேரம் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான காணொளிகளை காட்சிகளை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் ஆயுத தயாரிப்பு தளங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெபனானில் இருந்து 34 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 25 ராக்கெட்டுகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.


No comments