8 சிறுத்தை ரக டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பியது நோர்வே
யேர்மனியில் தயாரிக்கப்பட்ட எட்டு சிறுத்தை 2 ரக நவீன போர் டாங்கிகளை, நோர்வே உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது.
டாங்கிகள், வெடி மருந்துகள் மற்றும் கவச வாகனங்களை விமானம் மூலம் அனுப்பி வைத்த வீடியோவை நோர்வே இராணுவம் வெளியிட்டுள்ளது.
ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட நவீன போர் டாங்கிகள் தேவைப்படுவதாக உக்ரைன் கோரிக்கை விடுத்ததை அடுத்து யேர்மனி, போலந்து, போர்ச்சுகல், நோர்வே உள்ளிட்ட நேட்டோ நாடுகள், 48 டாங்கிகளை வழங்குவதாக உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment