உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கையில் தரையிறங்கியது!


உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 

விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணித்த போது, ​​எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை இந்த விமானம் வந்தடைந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானத்திற்கு 62 ஆயிரத்து 800 லீற்றர் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எரிபொருள் கையிருப்பின் பெறுமதி சுமார் ஒரு கோடியே அறுபத்து எட்டு இலட்சம் ரூபாய் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு மணி நேரம் 40 நிமிடங்களுக்குப் பிறகு விமானம் மீண்டும் துபாய்க்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 3வது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments